வியாழன், 26 டிசம்பர், 2019

இட நெருக்கடி  இருந்தும்
பயணம் தொடரும்,
நிறைய அனுபவங்கள்
பயில இன்னும் தொடரும்;
மற்றும் பல பயணங்கள்.
பதிவுகள் செய்திட கற்றது,
கை மண் அளவு.


வியாழன், 17 ஜனவரி, 2019

இன்றைய நாள்

ஆண்ட பரம்பரை என்று உரைத்து
வேண்டி  வணங்கி நடை பயில்வார்;
காரியம் வாய்த்தப்பின் கண்டு கொள்ள
மறந்த்திடுவார் உண்மை தமிழன்.

திங்கள், 7 ஜனவரி, 2019

அறிவிப்பு

நின்ற இடமெல்லாம் வெற்றி!
நிரந்தரம் பதவி எங்களுக்கு;
தொலைக்காட்சி செவ்வி தினம் தினம்,
மறதி ஊசி மக்களுக்கு ஏற்றுவோம்!
பொங்கலுக்கு உங்கள் பணத்தில்
உங்களுக்கே இனாம்!
தேர்தல் என்று அறிவிக்கும் ஆணையம்;
அடுத்த நாளில் அறிவிப்பு மாறும்.
மக்கள் விரும்புவதும்
விரைவு செய்திகள்!

கற்பனை

முழுநிலவு நேரம்
விண்மீனை மறந்தேன்;
பகல் பொழுது அன்று
நிலவுதனை மறந்தேன்;
கண்ணுக்கு தெரிவதெல்லாம்,
காட்சிதனை மறைக்கும் என்றால்
கடவுளை தேடுகின்றேன்,
எப்படி கொடுப்பார் காட்சி!

இலக்கு

கால்தடம் முன்னே செல்ல,
கறைந்தது சில நொடிகள்.
கண்முன்னே அழைக்கிறது இலக்கு!
வெளிச்சப் பூக்கள் வழி எங்கும்;
தொட்டுவிடும் தூரம்,
இன்னும் சில அடிகள்!
இலக்கை அடைந்தததும்
அடுத்தது என்ன?
தொட்டு விடும் தூரம்தான்
மற்றும் ஒரு பயணம்.
ஆக முடிவில்லாதது இலக்கு.

சனி, 5 ஜனவரி, 2019

நோய்

உடல் நலத்தில் சற்றே சுணக்கம்;
உறவினர் வருகை அதிக நெருக்கம்;
மகளின் மருத்துவம் நலம்பெற வகுக்கும்;
மனநலம் இனிமேல் இனிக்கும்.

அலமாரி

என்னை மீட்டெடுத்த நூல்களின் இருப்பிடம்;
வாசிப்புக்கு அழைக்கும் கண்ணாடி;
திறந்த பக்கங்களின் அடையாள சுவடு;
என் சுவாசக்காற்றின் வாசனை!
அருகழைக்கும் ஆனந்தம்!